சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் காதலர்களை ரோசாப்பூ கொடுத்து வரவேற்பு ஆஃபர் அளித்து உள்ளதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர். இதற்கு எதரிப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் தாலிக் கயிறுடன் காதலர் தின ஆஃபர் அறிவித்த தனியார் பேக்கரி நிறுவனத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விரைத்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் பேக்கரி நிறுவனம் ஆஃபர்களை கேன்சல் செய்து விட்டதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். உடனடியாக ஆஃபர் விளம்பர பலகையையும் நிறுவனத்தினர் அகற்றினர்.
You must be logged in to post a comment.