ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது.
முன்னதாக, அனுஞ்சை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன.
பின்னர், கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மாலை இந்திர விமானத்தில் ஐம்பெரும் கடவுள்களின் திருவீதி உலா நடைபெறும். வருகிற ஜூன் 8ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வாகத் தேர் திருவிழா நடைபெறும். இரவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
You must be logged in to post a comment.