வைகை அணையில் இருந்து 5899 கன அடி நீர் திறப்பு… இருபுறங்களும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் இரு கரைகளும் ஓடுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் இடங்களையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. வைகை அணையில் இருந்து 5899 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் பருவமழை கடந்த 15 நாட்கள் மேலாக தொடர்ந்து பெய்து வரக்கூடிய சூழலில் வைகை ஆற்றில் விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரில் தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் விவசாயம் மற்றும் குடிநீர் சேவைகளை போட்டி செய்து வருகிறது.

இந்நிலையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு கண்கொள்ளா காட்சியாக செல்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின்பு மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவது மதுரை மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வைகை ஆற்றுப் பகுதிகளில் மாநகராட்சி சரிவர ஆகாயத்தாமரை கிளை அகற்றாத நாள் வைகை ஆற்றின் தண்ணீர் இரண்டு கறைகளையும் தாண்டி ஆரப்பாளையம் செல்லும் சாலைகளில் செல்கிறது இதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்று பகுதியில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி தண்ணீர் சீராக செல்ல வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக மதுரை மாவட்டம் வைகைக் கரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க குறுஞ்செய்தி மூலமாக எச்சரிக்கை அனுப்பி வைத்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!