அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நீங்களும்  வாங்க … மாரிமுத்து இறந்தது திரையுலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சி-மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு பேட்டி…

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நீங்களும்  வாங்க என கூறிய வடிவேல் . கண்ணும் கண்ணும்  படத்தில் தான் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள்,கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையை இயக்குனர் மாரிமுத்து தான் உருவாக்கினார், அவர் இறந்தது திரையுலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சி-மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு பேட்டி.

விமான மூலம் சென்னை செல்வதற்காக நடிகர் வடிவேலு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து மாரிமுத்து இறப்பு குறித்து செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டார், அப்போது அவர் கூறுகையில், நடிகர் மாரிமுத்து எல்லாரும் விட்டும் சென்று விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, நேத்து தான் எனது தம்பியின் 13வது நாள் காரியம் என் தம்பியின் மறைவிற்காக எங்கள் குடும்பத்தின் அனைவரும் வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தோம், அப்போதுதான் மாரிமுத்து இறந்த செய்தி கேள்விப்பட்டேன், நான் கூட நாடகத்தின் இறுதி கட்சியில் ஏதும் சாவது போல் நடித்து இருப்பார் என்று இன்று முதலில் நான் நம்பவில்லை கடைசியில் பார்த்தால் குரல் பின்னணி கொடுக்கும் போது மாரடைப்பால் இறந்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் கஷ்டமாகிவிட்டது.

இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை, என் கூட ராஜ்கிரன் அலுவலகத்தில் இருந்து ராஜ்கிரனோடு நானும் அவரும் நெருங்கிய பழகிய ஆள் மாரிமுத்து, அவருடைய படம் தான் கண்ணும் கண்ணும் அந்தப் படத்தில் தான் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள் என்ற வசனம் வரும் அந்த நகைச்சுவையை அவர் தான் உருவாக்கினார், அதே படத்தில் கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையும் அவர்தான் உருவாக்கினார், மிகப்பெரிய சிந்தனையாளர் மனது விட்டு சிரிப்பார்.

தற்போது கூட மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனியார் தொலைக்காட்சிக்கு சிரித்து பேட்டி கொடுத்திருந்தார், நான் அப்போது கூட பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன், இவர் இறந்தது பெரிய உலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு இந்த நேரத்தில் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் உங்களுக்கு ஆறுதல் சொல்ல எங்கள் யாராலும் முடியாது. அந்த மன தைரியம் வருவதற்கு நான் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்.

*நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்த கேள்விக்கு*

வரலாம், திறந்த கதவு தானே உள்ளது, எல்லோருமே வரலாம்.. நீங்களும் வரலாம் என்று தெரிவித்தார்.

 

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!