கீழக்கரையில் பெணகளுக்கான தடுப்பூசி முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பெண்மணிகள்…

12/07/2021 அன்று கீழக்கரை பழைய மீன் கடை அருகிலுள்ள சேரான் தெருவில் இருக்கும் இப்ராகிம் கிட்டங்கியில் ராமநாதபுரம் தொகுதி எம் எல் ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கான இலவச கொரனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமை திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசீக்தீன் மற்றும் நகர் திமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான் முன்னிலையில் கீழக்கரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் M. நாதியா ஹனிபா துவக்கிவைத்தார்.

இந்த தடுப்பூசி முகாமில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் நகர் திமுக பிரமுகர்கள் இப்திகார் ஹசன்,  நசுருதீன்,  மீரான், எபன் ,  நயிம், பயாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு தேவையான உதவிகளை செய்தனர். மேலும  சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறக்கட்டளை சேர்மன் N.முகம்மது ஹனிபா நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!