நாளை (28/05/2021) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பாக தடுப்பூசி முகாம்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பாக 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் மேலாண் இயக்குனர் உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி இணைந்து சார்பாக 18 வயது முதல் 44 வயது வரை உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்றும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் குடும்பத்திற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை (28/05/2021) தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை பைபாஸ் சாலையில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதனை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மேலாண் இயக்குனர் மற்றும் பொது மேலாளர் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!