கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடர் கொரோனா தடுப்பூசி முகாம்..

கீழக்கரை நகரில் கொரனா தடுப்பூசி செலுத்துவதற்காக ஜமாஅத் மூலமாகவும், சமூக நல அமைப்புகள், மக்கள் நலச் சங்கங்கள், மற்றும் தனிநபர் ஏற்பாடுகளின் பேரிலும் ஊரில் பல இடங்களில் கொரனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் சுமார் 8 ஆயிரம் நபர்கள் வரை முதல் டோஸ் செலுத்தியுள்ளனர்.  இன்னும் இதுவரை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் 2ம் கட்ட தடுப்பூசி செலுத்துபவர்களுக்காகவும் கீழக்கரை நகராட்சியில் இன்று முதல் (09.08.2021) அலுவலக நாட்களில் தினந்தோறும் காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்கென கீழக்கரை நகராட்சி அலுவலக மேல் மாடியை நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. வயதானோர் மேல்மாடி வரை செல்ல சிரமம் உள்ளதாக நகராட்சி ஆணையரிடம் கேட்டதற்கு” கீழே தடுப்பூசி செலுத்த ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனி இடம் ஏற்பாடு செய்து தர உள்ளோம்” என்றார். இந் நிகழ்ச்சிக்கு நகர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கீழக்கரை வர்த்தக சங்கத்தினர் வந்திருந்தனர்.

இனி, தடுப்பூசி செலுத்த விரும்புவோர் கீழக்கரை நகராட்சிக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். முன்னதாக இதுகுறித்து ஆட்டோவில் விளம்பரம் செய்யப்பட்டது. தகவல்:- மக்கள் டீம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!