கல்லிலே கலை வண்ணம் கண்டான்… என்ற பாடல் வரிகளுக்கு உயிரோட்டம் தரும் வகையில் உத்திரகோசமங்கை கோயில் சன்னதியின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி சிற்பக்கலைக்கூடம். மனதில் உள்ள தேவையற்ற விஷயங்களை உட்புகாமல் செய்தால் தெளிந்த சிந்தனை கிடைக்கிறது. அதுபோல் கல்லில் தேவையற்ற பாகங்களை நீக்கினால், அழகு ஓவியமான தத்ரூப சிலை கிடக்கிறது. பார்த்தவுடன் மனதில் கொண்டு கருங்கல்லில் சிலை வடிவமைக்க முறையான பயிற்சியும், ஈடுபாடும், கலைத்திறனும் அவசியம். கருமை நிற கல்லை செதுக்கும்போது கல்லில் நாதம் (மணியோசை) கேட்க வேண்டும், இரவில் கல்லை உரசினால் தீப்பொறி பறக்கவேண்டும்.
கடந்த மூன்று தலைமுறைகளாக சிற்பக்கலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் சிற்பி கோபாலகிருஷ்ணணன் பிள்ளை என்பவர் ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில், பிரப்பன்வலசை பாம்பன் சுவாமி கோயில், இலங்கையில் உள்ள கண்டி கதிர்காம முருகன் கோயில்களில் செதுக்கிய சிலைகள் இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றது. 

சிற்பி உத்தண்டராமன் கூறியதாவது: ஆயக்கலை அறுபத்தி நான்கில் முக்கிய கலையாக சிற்பக்கலை பரிணமாளிக்கிறது. சுவாமி சிலைகளுக்குரிய கல்லை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது கல்லின் உறுதித்தன்மையாகும். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்னுமிடத்தில் தரையில் இருந்து 200 அடி ஆழத்தில் இயந்திரத்தால் நீள் சதுரவாக்கில் வெட்டப்படும் கற்களை தேர்வு சய்து சிற்பக்கலைக்கூடத்தில் வைத்து செதுக்க தொடங்குவோம்.
ஒரு கல்லில் மையப்புள்ளி உருவாக்கி அதனிலிருந்து அதன் நீள அகல, தடிமனுக்கு தகுந்தாற்போல் சிற்பக்கலை சூத்திரங்கள் (தாளம்) கொண்டு சித்திரம் வரைந்து செதுக்க தொடங்குவோம். (3 டைமன்சன்) முறையில் விநாயகருக்கு பஞ்சதாளம் (5), பெருமாளுக்கு நவதாளம் (9), சிவபெருமானுக்கு (நடராஜர்) 10,
என ஒவ்வொரு சுவாமிக்கும் சிற்ப வகைபாடுகள் உண்டு. முன்பு உளி கொண்டு கையினால் மிகவும் மதிநுட்பமாக செதுக்கி வந்தோம், தற்போது அறிவியல் வளர்ச்சியின் காரணமாக கிரைண்டிங், கட்டிங்மிஷின் கொண்டு எளிதாக வேலை செய்துவருகிறோம்.
தேசியத்தலைவர்களின் சிலை, கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களின் சிலை முதல் விழிப்புணர்வு ஊட்டும் சிலைகளும் செய்துள்ளேன். எனது மகனும் இத்தொழில் உள்ளார். இத்தொழிலில் ஈடுபடுவதற்கு தன்னார்வமும், பொறுமையும், தன்னம்பிக்கையும் அவசியம், செதுக்கும் போது சிறு சேதமானாலும் கூட அதனை புறக்கணித்துவிடுவோம். இந்துமத்தின் ஆகம விதிப்படி, சிற்பக்கலை சாஸ்திரப்படி உயிர்பெறும் சிலைகள் வழிபாட்டுக்கு உரியவைகளாகிவிடுகின்றன என்றார்.
நீங்களும் அவரை வாழ்த்த நினைத்தால் 95004 22913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











