உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கிலி, தென்னிந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் சங்கிலியை கொலை செய்துவிட்டதாக சில வெட்டுக்காயங்களுடன் கூடிய அவரது புகைப்படங்களை முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சங்கிலி சமூக வலைதளங்களில் அவதூறு பரபரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாகவும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றத்திலிருந்து ஊர்வலமாக வந்த 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!