உசிலம்பட்டி அருகே 1100 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ளது மேலத்திருமாணிக்கம் கிராமம்.இக்கிராமத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது மேலத் திருமாணிக்கம் பெரிய கண்மாய்.இக்கண்மாயின் கிழக்குப்பகுதியில் எட்டு அடி இணை துாண்கள் உள்ளன.இந்த இரண்டு இணை தூண்களும் இரண்டு நான்கடி கல்மட்ட பலகையால் இணைக்கப்பட்டுள்ளன.இணை தூண்களில் வடக்கு தூணில் வட்ட எழுத்தால் ஆன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இது 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்ட எழுத்துகளாகும்.இதில் 12 வரிகள் காணப்படுகின்றன.சில வரிகள் அழிந்துள்ளன.

அதில் 9 ம் நூற்றாண்டில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தன வைரயன் என்ற தங்க ஆபரணங்கள் செய்யும் வியாபாரி இந்த வேம்பக்குடி மடையை கட்டியது மட்டுமல்லாமல் மடையை பாதுகாக்கும் பொருட்டு அதற்கு வரி கொடுத்து ஆண்டிற்கு மூன்று போக வேளாண்மை செய்ய குடிமக்களுக்கு நன்மை செய்வித்தான் என்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன.இதனை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசியர்கள் ராஜகோபால் மற்றும் பிரியா தங்கள் கள ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.இக்கல்வெட்டு சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவித்தனர். மேலும் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண்மையே மக்களுக்கு வாழ்வாதாரமென்றும் அதை உயர்த்துவதற்கு கண்மாய்களையும் குளங்களையும் வெட்டி அதில் நீரைத்தேக்குவதற்காக மடைகளை கட்டி அதற்கு வரியும் செலுத்தினான் என்பது வட்டெழுத்து கல்வெட்டு உணர்த்துகின்றது எனக் கூறினர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!