அம்மா உணவகத்தில் ஊறுகாய் வாங்க உதவிய எம்எல்ஏ. உசிலம்பட்டியில் ருசிகரம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் நகா் மன்றத்தலைவருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு சாப்பிடுவர்களிடம் தரமான முறையில் உணவு உள்ளதா எனக் கேட்டறிந்தவர் தயிர் சாதத்திற்கு சைடிஸ் எதுவுமில்லாமல் வழங்கப்படுவதைக் பார்த்தவர் தயிர்சாதத்திற்கு ஊறுகாய் வழங்கினால் நன்றாக இருக்குமே என அம்மா உணவகப் பணியாளர்களிடம் தெரிவித்தவர் அதற்கான செலவுத் தொகையை நானே செலுத்தி விடுகிறேன் இனி தயிர்சாதத்திற்கு ஊறுகாய் வழங்குங்கள் எனக்கூறி விட்டு சென்றார்.இதைக் கேட்ட அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் ஊறுகாய் (சைடிஸ்) வழங்கிய எம்எல்ஏவுக்கு நன்றி எனக்கூற அங்கு சிறிது நேரம் சிரிப்பலை நிலவியது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!