மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி.இக்கல்லூரியில் சுமார் 3ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இக்கல்லூரியில் கடந்த நவம்பரில் அரசு உதவிபெரும் பாடப்பிரிவில் பயிலும் மாணவ மாணவியரிடம் அரசு விதிகளின்படி தேர்வுக்கட்டணம் ரூ300 க்குப் பதில் ரூ6250 வசூல் செய்து கல்லூரி முதல்வர் ரவி தேர்வுக்கட்டணம் வங்கியில் செலுத்தாமல் ரூ1 கோடியே 28லட்சம் கையாடல் செய்தாகவும் மாணவர்களிடம் வசூல் செய்த பணத்தை திரும்ப வழங்கக் கோரியும் கல்லூரி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவ மாணவியர் 2வது நாளாக கல்லூhரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அரசுக்கல்லூரி இணை இயக்குநர் பொன் முத்துராமலிங்கம் கல்லூரிக்கு சென்று முதல்வர் ரவியிடம் விசாரணை நடத்தினார்.மாணவர்களின் போராட்டம் 2 வது நாளாக இன்றும் தொடர்கிறது.

You must be logged in to post a comment.