உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உசிலம்பட்டி கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் மூலமாக கடன் பெற்று மாதந்தோறும் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கடன் தொகையை; நகராட்சி நிர்வாகம் முறையாக மாதந்தோறும் செலுத்தாமல் 4 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டுறவு சங்கத்திற்கு கடன் தொகை மாதந்தோறும் செலுத்தாமல் காலதாமதம் ஏற்படுவதால் கடன் சங்கத்தினர் அதற்குண்டான வட்டியும் செலுத்த வேண்டுமென தூய்மை பணியாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.மாதம் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து நகராட்சி நிர்வாகம் பணம் செலுத்துவதால் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் எந்த ஒரு முறையான பதில் அளிக்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.
.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!