உசிலம்பட்டி அருகே சுடுகாடு வசதி கேட்டு கிராமமக்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்தது கல்லூத்து கிராமம்.இக்கிராமத்தில் அருந்தியர் இன மக்கள் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 200 வருடங்களாக சுடுகாடு வசதி இல்லை.இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பதில் இல்லை.இந்நிலையில் இவர்கள் வீட்டில் ஏதேனும் துக்க நிகழ்ச்சி ஏற்ப்பட்டால் கிராமத்தின் அருகிலுள்ள ஓடையின் கரையில் புதைப்பதாக் கூறப்படுகிறது.

தற்போது 58 கிராம காலடவாயின் மூலம் இக்கிராம ஓடைப்பகுதியில் கடந்த 60 நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஓடை நிரம்பிக் காணப்படுகிறது.இந்நிலையில் கல்லூத்து காலணிப்பகுதியைச் சேர்ந்த லிங்கம் என்பவரை நேற்று முன்தினம் பாம்பு கடித்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்;டு சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார்.இவரது உடல் ஆம்புலன்ஸில் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சுடுகாடு மற்றும் அதற்கு பாதை வசதி கோரி கல்லூத்து சாலையில் பிணத்துடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவமறிந்த போலிசார் மற்றும் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!