உசிலம்பட்டியில் மொபைல் வெளிசசத்தில் வேட்புமனு வாங்கிய தேர்தல் அதிகாரிகள்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல்; நடைபெற உள்ளது.வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசிநாளான இன்று 24 வார்டுகளை உள்ளடக்கிய உசிலம்பட்டி நகராட்சிக்கு பலர் ஆர்வத்துடன் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.திமுக அமமுக நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர்.நாம் தமிழர் கட்சி சார்பில் மதியம் மனுத்தாக்கல் செய்த போது உசிலம்பட்டி நகராட்சியில் திடீரென கரண்ட் கட்  ஆனதால் அறையே கும்மிருட்டாணது..உடனடியாக ஜெனரேட்டரை ஆன் செய்ய அதிகாரிகள் தேடிய போது அந்த அறையை அலுவலகப் பணியாளர் பூட்டிவிட்டு சாவியுடன் சாப்பிட வெளியில் சென்றது தெரியவந்தது.வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாள் என்பதால் வேறு வழியின்றி அதிகாரிகள் மெபபைல் வெளிச்சத்தில் வேட்பு மனுவை சரி பார்த்து வாங்கிக் கொண்டனர்.இந்நிலை சுமார் 15 நிமிடம் நீடித்தது.சிலர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கரண்ட் கட் ஆனதை சென்டிமெண்டாக கருதிய சிலர் கரண்ட் வரும் பொறுமை காத்து கரண்ட் வந்த பின் வேட்புமனுவை வழங்கினர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!