மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி பெருமாள் கோவில் பட்டி மானூத்து சின்னக்கட்டளை பெருங்காமநல்லூர் பெரியகட்டளை ஆகிய கிராமப் பகுதிகள்
கிணற்று நீர் மற்றும் மழைநீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.எப்பொழுதும் இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை பருத்தி சோளம் போன்ற பயிர்களையே விவசாயம் செய்வர்.ஆனால் இந்த வருடம் நல்ல மழை பெய்து கிணற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் இக்கிராமப் பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில்; நெல் சாகுபடி செய்துள்ளனர்.இந்த நெற்பயிர்கள் நல்ல விளைச்சலைக் கண்டு அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன.நீண்ட வருடங்களுக்குப்பிறகு இந்த வருடம் நெல் நல்ல மகசூலைக் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


You must be logged in to post a comment.