சாப்டுரில் இறந்தவரின் உடலை யாரும் தூக்கிச் செல்ல யாரும் முன் வராத நிலையில் சககாவலர்களுடன் இணைந்து சுமார் 1கிமீ தூரம் தன் தோளில் தூக்கிச் செனற சார்புஆய்வாளரின் வாட்ஸ்அப் வீடியோ வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டுர் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வானராக இருப்பவர் மணிமொழி.இந்த ஊரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று தனது தோட்டத்து வீட்டில் இறந்து விட்ட நிலையில் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் உடலை தூக்கிச் செல்ல யாரும் முன்வரவில்லை.இந்நிலையில் சார்பு ஆய்வாளர் மணிமொழி தன் சக காவலர்களுடன் இணைந்து தேட்டத்து வீட்டில் இறந்த இளங்கோவன் உடலை கட்டிலில் வைத்து சுமார் 1கிமீ தூரம் தன் தோளில் சுமந்து சென்று பின்னர் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தக் காட்சி வாட்ஸ்அப்பில் வெயியாகி உள்ளது.மணிமொழியின் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!