உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி தேனி ரோடு முருகன் கோவில் முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசி விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியினர் மதுரை மாவட்ட செயலாளர் பி.டி.ஆர். சொக்கநாதன் தலைமையில் ஊரக வளர்ச்சிப் பிரிவு மாவட்ட தலைவர் மொக்க ராஜ் , மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் ரஞ்சித்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு,விலை வாசி உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றக்கோரி,உசிலம்பட்டி நகராட்சி வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய கோரிக்கை வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்தினர். நகர தலைவர் பாண்டியராஜன் வடக்கு ஒன்றிய தலைவர் சின்னச்சாமி, தெற்கு ஒன்றிய தலைவர் முருகன், மாவட்ட இளைஞரணி தீபன் முத்தையா சேடபட்டி மாத்தூரன், மருது காளை, செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் செல்வம் ,நகரப் பொதுச்செயலாளர்கள் தினகரன், சௌந்தரபாண்டியன், நாகராஜ், சதீஷ், சிவா, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!