கீரிபட்டி கிராமத்தில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் தெருவிலுள்ள சகதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி பஞ்சாயத்தைச் சார்ந்தது வங்காரு நகர்.இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதியில் உள்ள் சாலை செம்மண் ரோட்டில் அமைந்துள்ளது.இத் தெருவில் தண்ணீர் செல்ல வழியின்றி சாலையிலேயே தேங்கி நிற்கின்றது.மேலும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தண்ணீரில் கொசு உற்பத்தியாகதாகவும் இத்தெருவில் குழந்தைகள் இறங்கி நடப்பனதால் பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளதாகவும் இது குறித்து ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை மனுக்கொடுத்தும் எவ்வித பதிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சகதியாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்;டத்தில் ஈடுபட்;டனர்.இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!