வகுரணியில் கொய்யாப்பழம் அதிக விளைச்சலிருந்தும் விற்பனை செய்யமுடியாததால் குப்பையில் கொட்டும் அவலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி கிராமத்தில் சுமார் 10ஏக்கர் பரப்பளவில் டைபான் பின் என்கின்ற ரகம் கொண்ட சிவப்பு கொய்யாவை விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்து வருகினறனர். இந்த சிவப்பு கொய்யாப்பழத்தை வெளிமாநிலங்களில் விரும்பி சாப்பிடுவர். இதனால் கேரளாஇ ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கினால் கடந்த 1வருடமாக வெளிமாநில ஏற்றுமதி செய்வது தடைபட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சாதாரன கொய்யாப்பழம் பெருமளவில் விற்பனை நடைபெறுவதால் சிவப்பு கொய்யாப்பழத்திற்கு மவுசு குறைந்துள்ளது.

இதனால் விற்பனை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணத்தினாலும் கொய்யா பழம் செடியிலேயே அழுகிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது தினமும் 600கிலோ கொய்யா சாகுபடி செய்து வருவதால் வேறு வழியில்லாமல் பழத்தை பிடுங்கி குப்பையில் கொட்டுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!