உசிலம்பட்டி – கால்பந்து கழகம் சார்பில் ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகோப்பைகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானதத்தில் கால்பந்து கழகம் சார்பில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 39 அணிகள் கலந்து கொண்டன. இதில் உசிலம்பட்டி வருணா கால்பந்தாட்ட அணியினரும், தேனி சின்னா மெமோரியல் கால்பந்தாட்ட அணியினரும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று போட்டி நடைபெற்றது.

இதில் தேனி சின்னா மெமோரியல் கால்பந்தாட்ட கழகத்தைச் சேர்ந்த அணியினர் முதலிடத்தையும், உசிலம்பட்டி வருணா கால்பந்தாட்ட கழகத்தைச் சேர்ந்த அணியினர் இரண்டாம் இடத்தையும், தேனி பெனடிக் கால்பந்தாட்ட அணியினர் மூன்றாவது இடத்தையும், மேலூர் கால்பந்தாட்ட அணியினர் 4-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு உசிலம்பட்டி தி.மு.க ஒன்றிய செயலாளர் சுதந்திரம் பரிசுக்கோப்பைகளை வழங்கினார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன், கால்பந்து கழக செயலாளர் சுபாஷ், கால்பந்து கழக பொருளாளர் யுவராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகஸ்டின், சின்னப்பா ஆகியோர்கள் விளையாட்டுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!