உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதிகளில் தனியார் அமைப்பு சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதிகளில் தனியார் அமைப்பு சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிட்குட்பட்ட எ.ராமநாதபுரம், குப்பணம்பட்டி, ஆரியபட்டி, பொட்டுலுப்பட்டி, கன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஊரணி, கண்மாய்கரை பகுதியில் மதுரை ராயல் எம்பரர்ஸ், விக்டரி, செந்தமிழ், ஜெயம் போன்ற லயன்ஸ் சங்கங்கள் இணைந்து உலகளாவிய சேவை கொண்டாட்டதிற்காக ஓராயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

அதனைதொடர்ந்து வேம்பு, புளியமரம், ஆலமரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நட்டனர். இதில் லயன்ஸ் சங்க இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ஒன்றியபெருந்தலைவர் கவிதாராஜா, ஆரியபட்டி ஊராட்சி தலைவர் மகேஸ்வரிபாண்டியன், செல்லம்பட்டி ஒன்றியஅன்னா தொழிற்சங்க துனை செயலாளர் அன்னலட்சுமி, குப்பணம்பட்டி வார்டுஉறுப்பினர் ராஜேந்திரன், அதிமுக நகரசெயலாளர் பூமாராஜா, ஆவின்நிர்வாக குழு உறுப்பினர் துரைதனராஜ், சிந்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், ஆரியபட்டி ஊராட்சி துணைத்தலைவர் தனலெட்சுமி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!