உசிலம்பட்டியில் சொத்து தகராறில் பேருந்து நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜீவா(32). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஜீவா தனக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து தரும்படி கடந்த சில வருடங்களாக கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அவருக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரமால் அவரை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜீவா உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சுமார் 100அடி உயரமுள்ள மிகப்பெரிய தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். தகவலறிந்த உசிலம்பட்டி போலிசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் உரிய சொத்தை பிரித்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவரை இறங்கும்படி கூறினார். ஆனால் அவர் இறங்க மறுத்து கீழே குதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். தீயணைப்புத்துறையினர் சுமார் அரைமணி நேரம் போராடி அவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடபட்டு ஜீவாவை தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டனர். அதனைதொடர்ந்து அவரை உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

உசிலை  சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!