உசிலம்பட்டி அருகே கீழப்பட்டியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு, கார்கள் உடைப்பு. போலீசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் ஊராட்சிட்குட்பட்டது கீழப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அங்கன்வாடி மற்றும் தண்ணீர் தொட்டி வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கீழப்பட்டியில் அரசு நிலத்தில் அங்கன்வாடி மற்றும் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை மீட்க ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி கொடுத்த தகவலின் பேரில் கோட்டாட்சியர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்ட வருவாய்துறையினர் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, அங்கன்வாடி மையம் கட்ட அடித்தளம் போட்டு, பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், ஊராட்சி மன்ற தலைவரின் வீடுகள், கண்ணாடிகள், பல்புகள் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரையும் உடைத்து சேதப்படுத்தினர். மேலும் கான்கிரீட் இயந்திரத்தையும் உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இதனால் உசிலம்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

உசிலை  சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!