தமிழகத்தில் மதுபானக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து பா.ஜ சார்பில் உசிலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கொரோனா வைரஸ் தாக்;கத்தின் 2வது அலையால் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.இந்நிலையில் வருகிற திங்கள் கிழமை முதல் அரசு மதுபானக்கடைகளைத் திறக்க அரசு அறிவித்துள்ளது.மது பானக்கடைகளைத் திறந்தால் கடைகளில் சமூக இடைவெளியின்றி கூட்டம் வரும்; .அதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும.;மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குப்படி தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பா.ஜ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சி மாவட்டச் செயலாளர் சொக்கநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ் உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் தெற்கு முருகன் வடக்கு ஒன்றிய தலைவர் சின்னசாமி அமைப்புசாரா அணியின் மாவட்ட துணை தலைவர் முத்து நகர பொதுச்செயலாளர் சவுந்தரபாண்டி நகர பொதுச் செயலாளர் தமிழரசன் மாவட்ட செயலாளர் அமைப்புசாரா அணியின் பிரபு அமைப்புசாரா அணியின் ஒன்றிய தலைவர் நல்லதம்பி அமைப்புசாரா அணியின் ஒன்றிய துணைத் தலைவர் மயில் ராஜா அமைப்புசாரா ஒன்றிய தலைவர் செல்லம்பட்டி கலைச்செல்வன் நகர துணைத்தலைவர் அமைப்புசாரா அணியின் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர் கொரோனா முழு ஊரடங்கு சமயமென்பதால் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்களின்றி முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுபானக்கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப பட்டன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!