தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக சுகாதாரதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு சர்வதேச உரிமைகள் கழக மாவட்ட துணைத்தலைவர் சூரியபாண்டி தினமும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.





You must be logged in to post a comment.