தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு பிறப்பிக்கட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி பகுதியில் முதற்கட்டமாக கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் மாற்றுதிறனாளிகள், நலிவடைந்தோர் என 50க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பினை மதுரை மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் வழங்கினார். மேலும் ஏழை எளிய மக்களுக்கு இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்கபட உள்ளதாக மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தெரிவித்தார். உசிலம்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.





You must be logged in to post a comment.