உசிலம்பட்டியில் முழு ஊரடங்கில் விதிமுறையை மீறி திறந்த கடைகளுக்கு வட்டாச்சியர் எச்சரிக்கை விடுத்து அபராதம் விதித்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பொதுமக்களை வேகமாகப்பரவி வருகின்றது.இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு ழுழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதிகயளில் சிலர் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து உசிலம்பட்டி வட்டாச்சியர் விஜயலட்சுமி தலைமையில் அரசு அதிகாரிகள் கருப்புக் கோவில் தெரு நாடார் புதுத் தெரு ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது விதிமுறைகளை மீறி திறந்திருந்த மொபைல் கடை கேம்ஸ் சென்டர் கடை மிக்சர் கடை ஆகிய கடைகளின் உரிமையாளர்களுக்கு கொரோனா ஊரடங்;கில் கடை திறக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்து கடைகளுக்கு ரூ500 அபராதமும் விதித்தார்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!