உசிலம்பட்டியில் சமூக இடைவெளியின்றி அமைச்சரை பின்தொடர்ந்த திமுக தொண்டர்கள்.அப்செட் ஆன அமைச்சர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வணிகவரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அமைச்சர் மூர்த்தி முதன்முதலில் உசிலம்பட்டிக்கு வருகை தந்துள்ளதால் உற்சாகமான திமுக தொண்டர்கள் அவரை வரவேற்க 50க்கும் மேற்ப்பட்ட கார்களில் பின் தொடர்ந்து வந்துனர்.உசிலம்பட்டி அரசு மருத்துவமணை முன் வந்திறங்கிய அவரை 100க்கும் மேற்ப்பட்ட திமுக தொண்டர்கள் வரவேற்க குவிந்தனர்.காரிலிருந்து இறங்கியவரை சமூக இடைவெளியின்றி உரசிக் கொண்டே வந்தனர். ;.இதனைக் கண்ட அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் கடுப்பாகி எச்சரித்தனர்.திமுகவினர் அதை கண்டு கொள்ளவில்லை. மருத்துவமணைக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளும் போதும் தொண்டர்கள் அவரை பின் தொடர்ந்து கூட்டமாக வந்தனர்.ஒரு கட்டத்தில் கடுப்பான அமைச்சர் சமூக இடைவெளியின்றி நீங்களே இப்படி வந்தால் அப்புறம் கொரோனாவை எப்படி ஒழிப்பது எனக் கூறினார். ஆனால் கடைசி வரை தொண்டர்கள் பின் தொடர்ந்தே வந்ததால் வேறு வழியின்றி கூட்டத்தோடு கூட்டமாக ஆய்வை முடித்து விட்டு காரில் ஏறி கிளம்பிச் சென்றனர்.ஆய்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி., கிராமப்புற பகுதியில் தொற்று ஏறபட்டால் அந்த அந்த பகுதிகளிலேயே உள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.

உசிலைசிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!