சின்னக்கட்டளை கிராமத்தில் கொரோனா நிவாரணத்தொகை ரூ2ஆயிரத்தில் ரூ300 லஞ்சம் கேட்டதால் கிராமமக்கள் ரேசன்கடையை முற்றுகையிட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் 2ம் அலை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.இதனால் தமிழக அரசு சார்பில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது..மேலும் அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரேசன் கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ4 ஆயிரம் அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ2 ஆயிரம்; வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தில் உள்ள (எம்டி-80) ரேசனகடையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்துள்ளது..இன்று திங்கள் கிழமை முழு ஊரடங்கு என்ற போதிலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னக்கட்டளை கிராமமக்கள் ரேசன் கடையின் முன் கூடினர்.ஆனால் ரேசன்கடையிலிருந்த விற்பனையாளர் பாண்டி ரூ2 ஆயிரத்திற்குப் பதில் ரூ1700 மட்டுமே கொடுத்தாகக் கூறப்படுகிறது

.இது குறித்து கிராமமக்கள் கேட்டதற்கு இத்தொகை மேலதிகாரிகளுக்கு பங்கு கொடுக்க பணம் ரூ300 பிடிப்பதாகவும் மேலும் முழு ஊரடங்கில் உங்களுக்கு பணம் கொடுப்பதே பெரிய விஷயம் என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் ரேசன் கடையை முற்றுகையிட்டு விற்பளையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் நிவாரணத் தொகை கொடுப்பதை பாதிலேயே நிறுத்திய விற்பனையாளர் முருகன் ரேசன் கடையை மூடிவிட்டு பாதியிலேயே கிளம்பிச் சென்றார்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த வீரபத்ரன் கூறும் போது ரேசன் கடை விற்பனையாளர் கொரோனா உதவித்;தொகையில் ரூ300 லஞ்சமாக பிடித்தது குறித்து தமிழக அரசுக்கும் உசிலம்பட்டி கோட்டாச்சியருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளதாக உள்ளதாக தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!