உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் வீடு தேடி காய்கறிகள்,பழங்கள் விற்பனையை நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல் தொடங்கி வைத்தார்.

மிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு காய்கறிகள்,பழங்கள், தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் அரசு சார்பில் வாகனம் மூலம் வீடு தேடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கொரோனா கால கட்டத்தில் கொரோனா தடுப்பு பணியாக மக்களுக்கு காய்கறிகள்,பழங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் வாகனம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல் வாகனம் மூலம் விற்பனையை தொடங்கி வைத்தார். வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்பவர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு வெப்பநிலை கருவி கொண்டு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அகமதுகபீர், சரவணபிரபு, பரப்புரையாளர்கள் பாண்டி, தங்கபாண்டி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!