ஆதரவற்றவா்களுக்கு மதிய உணவு.5 வயது சிறுமியின் மனித நேயம்

உசிலம்பட்டி பேருந்து நிலைய பகுதியில் கொரோனா முழு ஊரடங்கால் உணவின்றி தவித்த ஆதரவற்ற, முதியோர்களுக்கு சமூக ஆர்வலரான 5வயது சிறுமி ஷஸ்டிகாஸ்ரீ (5) உணவு பொட்டலங்கள் வழங்கி பசியை போக்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதரவற்ற, முதியோர்களுக்கு அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்கண்ணன் – சிவகாமி தம்பதியின் செல்ல குழந்தையான 5வயது சிறுமி ஷஸ்டிகாஸ்ரீ சிறு வயது முதலே சமூக அக்கறையுடன் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். இவர் முழு ஊரடங்கால் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்ற, முதியோர்களுக்கு ஒருவேளைக்கு தேவையான உணவு பொட்டலங்களை வழங்கி அவர்களது பசியை போக்கினார். இவர் ஏற்கனவே கடந்த வருடம் கொரோனா கால கட்டத்தில் உணவின்றி தவித்த நாய்,குரங்குகள உள்ளிட்டவைகளுக்கு உணவுகள் வழங்கினார். இதே போல் இந்த வருடமும் இவரது சமூக பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் அனைவரும் இந்த குழந்தையை பாராட்டி செல்கின்றனர்

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!