உசிலம்பட்டியில் கொரோனா தொற்றினால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில்
கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் சூழலில் பல இடங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கைகள் வசதியின்றியும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதிகளில் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது..குறிப்பாக கிராமப்பகுதிகளில் கொரோனா தொற்றினால் கடந்த வாரத்தில் மட்டும் 100க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்..
இந்நிலையில் உசிலம்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றின் ஆரம்ப அறிகுறியுடன் வருபவர்களை செட்டியபட்டி கருமாத்தூர் பகுதிகளில் உள்ள தனிமை சிகிச்சை மையத்திற்கும்
முழுவதுமாக பாதிக்கப்பட்டவர்களை மதுரை தேனி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.அங்கே செல்லும் நோயாளிகள் படுக்கை வசதி இல்;லாமல் காத்திருந்து உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்ப்படுகிறது.உசிலம்பட்டியில் அமைந்துள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சீமாங் திட்டத்தின் மூலம் பிரசவத்திற்கு மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதன் காரணமாக தற்போத கொரோனா பாதிப்பு காரணமாக உள்நோயாளிகளுக்கு அனுமதி இல்லை.இந்த அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம், தீவிர சிகிச்சை மையம், காப்பீட்டு திட்ட வார்டுகள் தனித்தனியே இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நான்கு வளாகங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது
.இந்நிலையில் முதல் இரண்டு தளங்களில் பிரசவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில் மேல் தளங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட படுக்கைகள் தற்போதைய உள்நோயாளிகள் அனுமதி இல்லாததால் வெறிச்சோடியே காணப்படுகிறது.மேலும் அரசு மருத்துவமனை அருகில் 10க்கும் மேற்பட்ட விசாலமான
இடவசதி கொண்ட மண்டபங்களும் 5க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் அருகிலேயே அமைந்துள்ளன.உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை சிறப்பாக கவனிக்கப்பட்டு வருவதால் அதிகாரிகளும் மருத்துவர்களும் இம் மருத்துவமனையில் கொரோனா தனி வார்டு அமைக்க தயங்கி வருவதாக கூறப்படும் நிலையில் இதன் அருகிலுள்ள தற்போது பயன்பாடு இல்லாமல் இருக்ம் தனியார் மண்டபங்களையும் பள்ளிகளையும் கொரோனா தனி வார்டாக மாற்றி அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளை இப்பகுதிக்கு தற்காலிகமாக மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் மதுரை தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் தொற்றுகளும் அதிகரித்து வருவதை குறைக்க முடியும் எனவும் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் உசிலம்பட்டியில் கொரோனா சிகிச்சை மையமாக அமைத்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.