தமிழகமெங்கும் கொரோனாவின் 2ம் தாக்கம் வேகமாகப் பரவி வருகின்றது.இதனால் தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதி;த்து வருகின்றது.இந்நிலையில் தழிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முழுஊரடங்கையொட்டி போலிசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.உசிலம்பட்டியின் முக்கியப் பகுதிகளாலான மதுரை ரோடு தேனி ரோடு பேருந்து நிலையப்பகுதிகளில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் வழக்கம் போல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகள் போலிசாரின் கெடுபிடியில் தப்ப மெயின் சாலையின் அருகிலுள்ள குறுகிய தெருக்களில் புகுந்து செல்கின்றனர்.இதனால் குறுகிய தெருக்களில் இருசக்கர வானகங்கள் அணிவகுத்துச் சென்றன.சிலர் போலிசார் கட்டிய தடுப்புக்கயிற்றில் புகுந்து உள்ளே சென்றனர்.இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.எனவே போலிசார்; பிரதான சாலைகள் மட்டுமல்லாது அதன் அருகிலுள்ள குறுகிய தெருக்களையும் கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You must be logged in to post a comment.