மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரத்தைச் சேர்ந்த வீரத்தேவர் மகன் பவுன்ராஜ் (45). இவர் பிரபல நடிகர்
சிவகார்த்தியனுடன் வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த ரஜினிமுருகன் படத்தில் குடிசையில் வாழைத்தாரை பிடுங்க முயற்சி செய்வார். அப்போது வாழப்பழத்தை பிடுங்க அரிவாளா, மதுரைக்காரனுக்கு கைதான் அரிவாள், கத்தி என பேசிய காமெடி மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் பவுன்ராஜ் திருமணமான சில மாதத்தில் பூதிப்புரம் கிராமத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகன், மனைவியோடு திண்டுக்கலில் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழிந்தார். அவரது உடல் சொந்த ஊரான பூதிப்புரம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது


You must be logged in to post a comment.