உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமணைகளில் கட்டமைப்பு வசதிகள், படுக்கை வசதிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக சுகாதாரதுறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் அனைத்து அரசு மருத்துவமணைகளில் ஆக்ஜிசன் தட்டுபாடு, கட்டமைப்பு வசதிகள், படுக்கை வசதி உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட தலைமை மருந்துவமனையான இந்த மருத்துவமனையில் தினமும் எத்தனை நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள், கர்ப்பிணி பெண்களின் வருகை, எத்தனை படுக்கை வசதிகள், தினமும் நோயாளிகளுக்கு சத்தான உணவுகள் சரியாக வழங்கப்படுகிறதா, வெளிநோயாளிகள் பரிவு, அவசரசிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதில் அரசு மருத்துவமணை மருத்துவர்கள், செவிலியர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!