தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருந்துகடைகள், பால், காய்கறி மற்றும் அத்யாவசிய கடைகள் மதியம் 12மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையில்லாமல்
வாகனத்தில் ஊர்சுற்றுபவர்களை போலீசார் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பணிகளில் காவல்துணை கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.கொரோனாவிற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் உலா வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் போலீசார் உரிய காரணங்களை கேட்டு, அத்யாவசிய காரணங்களுக்கு செல்வபர்கள் மட்டும் அனுமதிக்கபடுகிறார்கள். ஆனால் தேவையில்லாமல் வாகனங்களில் ஊர்சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து திரும்பி அனுப்பினர்.


You must be logged in to post a comment.