தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருந்துகடைகள், பால், காய்கறி மற்றும் அத்யாவசிய கடைகள் மதியம் 12மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக அரசு விதிமுறைகள் படி காலை முதல் காய்கறி கடைகள், மருந்துக்கடைகள், மலிகைகடைகள், பால் கடைகள், உள்ளிட்டவைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. மேலும் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் ஜவுளிக்கடைகள் நகைகடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளது.ஆனால் அத்யாவசிய கடைகளில் ஒன்றான பூ சந்தை வழக்கம் போல் செயல்பட்டாலும், உசிலம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் பறித்த பூக்களை விற்பனைக்காக உசிலம்பட்டி பூ சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். மேலும் கொரோனா அச்சமின்றி கூட்டமாக குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உசிலம்பட்டி பேருந்து நிலையம் பேருந்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கொரோனா விதிமுறைகளை மீறி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களை போலீசார் என்ன காரணத்திற்காக செல்கிறார்கள் என கேட்டறிந்தும், தேவையில்லாமல் ஊhட்சுற்றுபவர்களை எச்சரித்தும் வருகின்றனர்
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.