உசிலம்பட்டியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட மின் தகன மயானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாகராட்சிக்குட்பட்ட 24 வார்டு மக்களின் தேவைக்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் சுமார் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம் கட்ட அரசு ஆணை வழங்கிய நிலையில் கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டது. அதனைதொடர்ந்து மின் மயான கட்டுமான பணிகள் முடிவடைந்தும் கடந்த 8 ஆண்டுகளாக மின் இணைப்பு பெருவதற்கான கால தாமதத்தால் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மின்சாரவாரியத்தில் மின் இணைப்பு பெறப்பட்டு மின் மயானத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றதையடுத்து நவீன எரிவாயு மின் மயானம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு சடலத்திற்கு சுமார் 3 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் மயானத்தின் மூலம் உசிலம்பட்டி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!