உசிலம்பட்டியில் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ழுழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்லும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக இன்று தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முழு ஊரடங்கையொட்டி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயங்காததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் நகை கடைவீதி, ஜவுளிக்கடைவீதி, காய்கறி சந்தை, முக்கிய சாலைகளான தேனிரோடு, வத்தலகுண்டு ரோடு, பேரையூர் ரோடு உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பூ சந்தை மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து மல்லிகை ரோஜா பூக்களை மட்டும் விவசாயிகளிடமிருந்து தொழிற்சாலைக்கு அனுப்புவதற்காக வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் வழக்கம் போல் மருந்துகடைகள், மருத்துவமணைகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் நலன்கருதி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்பட்டு வந்தாலும் குறைந்த அளவிலேயே மக்கள் சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். மேலும் போலீசார் முழு ஊரடங்கையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்தும், வழக்குபதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!