பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள்- பாஜக தேசிய செயலர் ஹச்.ராஜா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடைபெற்ற மலிவு விலை மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மருந்தகத்தை திறந்து வைத்த பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா.,தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என சுகாதாரத்துறை தெரிவிக்கவில்லை, ஆனால் மற்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கும் போது கொடுத்து உதவலாமா வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.மேலும் எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என தமிழை அழித்த கும்பல் இன்று தமிழைப்பற்றி பேசிகிறது என சாடினார்.மேலும் நடிப்பில் மட்டுமே கமல் விஷயம் பெரியதாய் தெரியும் மற்றபடி பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள்.,கண்டெய்னர், மொபைல் டாய்லைட் என எதைக் கண்டாலும் பயப்படுகிறார் கமல் இவர் உலக நாயகனா என்றும் ஸ்டாலின் முட்டாள் என தெரியும் அதைப் போல பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமலும் முட்டாள்தான் இன்றைக்கு முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் தயாரிக்கலாமா, திறக்கலாமா என்பதை கோர்ட் முடிவைடுக்கட்டும் ஆனால் ஆயிரம் டன் ஆக்ஸிஜன் கொள்ளளவு உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை தற்போது அத்தியாவசிய தேவை இருக்கும் போது அதை திறக்க தமிழக அரசு எந்த ஆட்சபனையும் செய்ய வேண்டாம் என ஹச்.ராஜா பேட்டியளித்தார்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!