வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள்.. உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. ஆலோசனை கூட்டத்தில் அனைவரையும் கதற விட்ட சுயேச்சை வேட்பாளர்..

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள் என உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுயேச்சை வேட்பாளர் கோஷமிட்டதால், சுயேட்சை வேட்பாளருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து சான்று வழங்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் செயல்பட முகவர்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோட்டாச்சியர் ராஜ்குமார் வழங்கினார்.இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுயேட்சை வேட்பாளர் தனசேகரன் தேர்தலின் போது அதிகப்படியாக பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள் என திடீரென கோஷமிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இதனை கண்ட அதிமுக நிர்வாகிகள் ஆதரமற்ற கோஷங்கள் எப்ப கூடாது என கூறி சுயேட்சை வேட்பாளர் தனசேகரனுடன் வாக்குவாததில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவமறிந்து விரைந்து வந்த போலிசார் இரு தரப்பினரையும் சமாதானப் படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர்.

உசிலை  சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!