உசிலம்பட்டியில் இறைவனை கண்டித்து ப்ளக்ஸ் அடித்து, மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்திய தன்னார்வ அமைப்பு இளைஞர்கள்

சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் நடிகரும், இயற்கை ஆர்வலருமான விவேக் -ன் திடீர் மறைவு முன்னிட்டு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் மரம் நடும் தன்னார்வ அமைப்பினர் மத்தியில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் உலகெங்கும் அவருக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சிவாலயம் திருப்பணிக்குழு நண்பர்கள் சார்பில் மர இனங்களின் காவலனை மரணத்தால் எங்களிடமிருந்து பிரித்த இறைவனை கண்டிக்கிறோம் என ப்ளக்ஸ் அடித்து விவேக் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் மரங்கள் நடுவதில் ஆர்வம் கொண்ட விவேக் மறைவின் நினைவாக இந்த தன்னார்வ அமைப்பின் இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினா்

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!