பசுமாட்டை பத்திரமாக பாதுகாக்கும் பாசக்காரவேட்டை ராஜா. உசிலம்பட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்

மதுரைமாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது அன்னம்பார்பட்டி. இங்கு உள்ள இரயில்வேபீடர் தெருவில் வசித்து வருபவர் பால்ராஜ்(45). விவசாயியான இவர் தனது வீட்டில் 3பசுமாடுகளும், 4ஆட்டுகுட்டிகளும், வளர்த்து வருகிறார். அதனுடன் சேர்த்து வீட்டுகாவலுக்காக இரண்டு நாயையும் வளர்த்து வருகிறார் .இதற்குN வட்டை ராஜா-ராக்கி எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்நிலையில் பால்ராஜ் தனது 3பசுமாடுகளை மேய்ச்சலுக்காக சுமார் 1கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது தோட்டத்திற்கு தினமும் காலையில் அழைத்து செல்வார்.

அப்போது அவருடன் வேட்டை ராஜா பெயர் கொண்ட நாயும் உடன் செல்லும். தன்னுடைய எஜமானர் பசுமாட்டை கயிறுகட்டி அழைத்துச் செல்வதை கவனித்த நாய் ஒருகட்டத்தில் பசுமாட்டை தானேபிடித்து செல்ல முயற்சி செய்த நிலையில் அந்த முயற்சி வெற்றி அடைந்தது. தினமும் காலையில் 2பசுமாட்டை பால்ராஜ் பிடித்து செல்ல அவருடன் மற்றொரு பசுமாட்டை பால்ராஜ் உடன் செல்லும் நாயும் மாட்டின் கயிற்றை தனது வாயால் கவ்வியபடியே தோட்டத்திற்கு அழைத்து செல்கிறது. காலைமுதல் மாலை வரை மேய்ச்சல் முடிந்த பிறகு பசுமாடுகளை மாலையில் பால்கறப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் போதும் அதே நடைமுறையில் 2பசுவை பால்ராஜ் அழைத்துவர, மற்றொரு பசுவை நாய் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருகிறது.ஒருகட்டத்தில் வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையில் வாகனங்கள் வந்தாலும் நாய் பசுமாட்டை வாகனநெரிசலில் சிக்காமல் நைசாக சாலையை கடந்து பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருகிறது. இது போல்கடந்த 2வருடங்களாக பசுமாட்டைநாய் அழைத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இந்த நாய் காவல் தெய்வமாக காவல் காப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் இந்தநாய் இருப்பதால் அந்த பகுதி மக்கள் பயமில்லாமல் வெளியூர்களுக்கு செல்வதாகவும், இரவுநேரங்களில் திருடர்கள் வருவது குறைந்;துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்தநாயின்செயல் உசிலம்பட்டி பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!