முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் 200ரூ அபராதம் விதித்து முககவசங்களை வழங்கினர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவும் சூழ்நிலையில் அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் முககசவங்கள் அணிய வேண்டுமென சுகாதாரதுறையினர் எச்சரித்து வருகின்றனர். மேலும் முககவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை முன்பு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவின்பேரில் கோட்டாட்சியர் ராஜ்குமார் அறிவுறத்தலின்படி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் ரத்தினவேல் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் இருசக்கரவாகனங்கள், ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் என அனைவருக்கும் 200ரூபாய் அபராதம் விதித்து முககவசங்களையும் வழங்கினர். மேலும் கொரோனா பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். இதில் நகராட்சி சுகாதாரஆய்வாளர் அகமதுகபீர், சரவணபிரபு, மற்றும் பரப்புரை மேற்பார்வையாளர் பாண்டி, தங்கபாண்டி, சக்திவேல் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!