உசிலம்பட்டிமுதல்வர் பிரச்சாரம் செய்த போது எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட சீர்மரபினர் நல சங்க நிர்வாகிகளால் பரபரப்பு.

உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்த போது இட ஒதுக்கீடு வழங்காத பழனிசாமி என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட சீர்மரபினர் நல சங்க நிர்வாகிகளை முதல்வர் முன்பு அடித்து விரட்டிய அதிமுகவினரால் பரபரப்பு.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அய்யப்பன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்.அப்போது அங்கிருந்த சீர்மரபினர் நல சங்க நிர்வாகிகள் முதல்வர் பழனிசாமி ஒழிக,இட ஒதுக்கீடு வழங்காத எடப்பாடியே போ என கோஷமிட்டனர். உடனே அங்கிருந்த அதிமுகவினர் அவர்களை முதல்வர் முன்பு தாக்கினர். அதனைதொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!