அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வாசிங்மிசின் வழங்கப்படும்-முதல்வர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அய்யப்பன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர் அய்யப்பனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வாசிங்மிசின் வழங்கப்படும் எனவும், ரேசன் கடைகளுக்கு செல்ல வேண்டாம் இனி பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வரும் அதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் அதிகமாக தொழிற்சாலைகள் வர உள்ளதாகவும், இதனால் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் எளிதில் கிடைக்கும் எனவும், அதிமுக அரசால் சாமானிய விவசாயின் குழந்தைகள் மருத்துவம் படிக்கின்றார்கள் எனவும், மாநிலத்திலேயே தமிழகத்தில் தான் அதிகமாக அம்மா மினி கிளினிக் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், விவசாயிகளின் நலன் கருதி அதிமுக அரசால் அனைத்து பகுதிகளிலும் ஏரி,குளங்கள் தூர்வாரி விவசாயிகளுக்கு பயன்பாட்டுகாக கொண்டு வரப்பட்டுள்ளது.திமுக தலைவர் அனைத்து பகுதிகளிலும் அதிமுகவை பற்றி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக தலைவர் தனது குடும்பத்தை மட்டும் காப்பற்றகூடிய தலைவர், ஆனால் அதிமுக அரசு மக்களை காப்பாற்ற கூடிய கட்சி என பேசினார்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!