தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல்6ம்தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராக குக்கர் சின்னத்தில் மகேந்திரன் போட்டியிடுகிறார். இதற்கிடையே உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிட்குட்பட்ட சேடபட்டி,
பெருங்காமநல்லூர், நரியம்பட்டி, கன்னியம்பட்டி, கம்மாளபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம புறங்களில் அமமுக வேட்பாளர் மகேந்திரன் வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே குக்கர்சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது ஆரத்தி எடுக்க நின்றுகொண்டிரந்த முதியோர்களிடம் வேட்பாளர் மகேந்திரன் குக்கர் சின்னத்தை நினைவுக்கு கொண்டு செல்லும் வகையில் குக்கர் சின்னத்தில் வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார்;.மேலும் கடந்த 4வருடங்களாக மக்களுக்கு சிலின்டர் இலவசமாக கொடுக்காத அரசு தற்போது மக்களுக்கு இலவசமாக சிலின்டர் கொடுப்பதாக தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துள்ளதாக அமமுக வேட்பாளர் மகேந்திரன் குற்றம் சாட்டி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். மேலும் அமமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடையே எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். இதில் சேடபட்டி அமமுக செயலாளர் நரசிங்கபெருமாள் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

You must be logged in to post a comment.