மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானூத்து கிராமத்தைச் சேர்ந்த முனியான்டி மகள் ஹீரா(23)விற்கும் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த பிரசன்னா(28) என்பவருக்கும் கடந்த 18மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில்
கணவர் பிரசன்னா சென்னையில்; உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் மனைவியை தன்னுடைய தாயிடம் ஒப்படைத்து விட்டு சென்னையில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் கணவரின் தாய் அடிக்கடி மருமகள் ஹீராவிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 6மாதங்களுக்கு முன்பு ஹீரா தனது தாய் வீடான மானூத்து கிராமத்திற்கு வந்துள்ளார். ஆனால் இதுவரை கணவர் தரப்பிலிருந்து எந்தவிதமான அழைப்பும் வராததால் மனமுடைந்த ஹீரா தனது தாய் வீட்டில் தனியாக இருந்த போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த எழுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்

You must be logged in to post a comment.