உசிலம்பட்டி அருகே செம்பட்டியில் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துசென்ற ரூ.97000 பணம் பறிமுதல்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல்6ம்தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் வல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே வாக்களர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்கும் விதமாக போலீசாரும்,தேர்தல் பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் சாலையில் உள்ள செம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் பணம் பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். செம்பட்டியில் திருமங்கலத்திலிருந்து வந்த காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ97000 ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து வட்டாட்சியர் விஜயலட்சுமி முன்னிலையில் பணம் எண்ணப்பட்டு தேர்தல் கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!